Thursday, October 30, 2014

ஸ்ரீகிருஷ்ணரின் சரித்திர புத்தகம் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டுப்பக்கம் துன்பங்கள் அணுகுவதில்லை. எமராஜனும் நெருங்க அஞ்சுவான். இந்த பூலோகத்தில் ஹரி பக்தியை விட உயர்ந்ததோ ஈடு இணையானதோ சிறப்பை தருவதோ எதுவுமில்லை. ஹரி பக்தி செய்யவில்லை எனில் மனித ஜன்மம் எடுத்ததே வீண்.

பிரம்மாதி தேவரும் ஹரியை சந்தோஷப்படுத்தவே தவம் செய்கிறார்கள். ஹரி பக்தரின் குடும்பத்தவர் நரக வேதனை அனுபவிக்க தேவையில்லை. ஹரி நாமத்த உச்சரித்தவன் பிற மந்திரங்களை உச்சரிக்க வேண்டியதில்லை. ஹரியின் பாதகமலதீர்த்தத்தை தன் சிரம்மேல் தாங்குபவன் பிற புண்ணியதீர்த்தங்களில் நீராட வேண்டியதில்லை. மற்றும் யாகம்,தானம், தவம் ஆகியவற்றை செய்தபலன் கிட்டும் மற்றும் மீண்டும் இவ்வூலகில் மறுபிறப்பு எடுக்கவேண்டியது கிடையாது.ஹரியின் ஆலயத்தில் சேவை செய்பவர் பிற அனுகூலமான சேவை அவசியமில்லை. பூலோகத்தில் பெண்ணாசை என்னும் காமத்தை விடுவது கடினம், மூவுலக தேவராலும் முடியாதது, ஹரி பக்தரால் மட்டுமே முடியும். குரு பக்தியாலே மட்டுமே மனதில் பிற சலனம் ஏற்படுவதில்லை. பகவான் கிருஷ்ணரை பூஜிப்பவர்கள் மற்றவர்களால் தொழும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள் அதுதான் ஹரி பக்தியின் மகிமை. வைஷ்ணவம் என்றால் விஷ்ணுவின் மதமாகும். வைஷ்ணவனை தூஷிப்பவர்கள் மஹாபாவம் செய்தவர்களாவார்கள். அவர்கள் நாய்,நரி பிறவி எடுப்பர் மற்றும் பூத பிசாசு பீடைகளால் துன்புறுவார்கள். கஸ்தூரி மானிடமுள்ள கஸ்தூரி வாசனையும் புனுகு பூனையிடமுள்ள வாசைனை திரவியமும், கற்பூரம் எரிதவன் அதனதன் மகிமையை அறிவதில்லை. அதே போல ஹரி பக்தர்கள் அவர்களின் சிறப்பை அறிவதில்லை. அறிந்திருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை.

No comments:

Post a Comment