Thursday, October 30, 2014

பகவத் கீதையின் ஆத்ம தத்துவம் செல்வத்தில் பெரும் பற்றுடைய ஒருவனது செல்வம் திடீரென்று அழிந்துபோனால், நான் தொலைந்தேன் என்கிறான் அவன். செல்வம் தன் சொரூபமாகாது. தன்னுடைய ஒன்று அழிய, மனிதன் தானே அழிந்து போவதாக நினைக்கிறான். தன்னுடையது என்பது மமகாரம். தடித்த மமகாரம் அகங்காரம் போன்று ஆய்விடுகிறது. தேகத்தைத் தான் என்று எண்ணுவது அகங்காரம். மாறுபடும் தன்மையது தேகம். மாறாப்பெருநிலையில் வீற்றிருப்பது ஆத்ம சைதன்யம். தோன்றிய மேகம் மறையும்பொழுது ஆகாசம் எப்படி அழிவதில்லையோ, அப்படி ஆக்கை (உடல்) அழியும்போது ஆத்மா அழிவதில்லை. அதவது, நான் என்பது உடல் இல்லை. நான் என்பது ஆத்மா. அழிவு என்பது உடலுக்கு மட்டும் தான். ஆத்மாவுக்கு இல்லை. ஆத்மா எக்காலத்திலும் இறப்பதுமில்லை பிறப்பதுமில்லை. ஆத்மா என்றும் நித்தியமானவன். ஆத்மா என்றும் எக்காலத்திலும் அழியாதது. யாராலும் அழிக்க முடியாதது..

No comments:

Post a Comment